அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் - ஐ.நா தகவல்
அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதுப்பிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சீனாவை முந்திச் சென்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments