"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
கோவாவின் பனாஜி நகரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 26 பேர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர்.
இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடிப்பதால் ஒரே சிலிண்டரில் மூன்று நோயாளிகள் வரை மாற்றி மாற்றி ஆக்சிஜன் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறியுள்ளார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை நிர்வாகம் செய்ய மருத்துவர்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மரணங்கள் நிகழ்வதும் உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Comments