தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டு வர இயக்கப்படும் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல்
ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜன் ஏற்றி வருவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருவள்ளூரில் இருந்து காலி டேங்கர்களுடன் இந்த ரயில் ரூர்கேலாவுக்கு செல்கிறது. இரண்டு கிரோயோஜனிக் டேங்கர்கள் கொண்ட இந்த ரயில் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் நிரப்பி தமிழகத்திற்கு திரும்பி வரும்.
தமிழகத்திற்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் மூலம் வரும் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலமாக பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், போன்ற பல மாநிலங்களுக்கு இதுவரை 375 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
Comments