தமிழகத்தில் ஒரே நாளில் 29,272 பேருக்கு கொரோனா... ஒரே நாளில் 298பேர் பலி

0 3422

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை கடந்துள்ளது. இருந்த போதிலும், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 19 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை கடந்துள்ளது. இருந்த போதிலும், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 19 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந் தொற்று பாதிப்பிலிருந்து, 19,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 298 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள், சென்னையில்  புதிதாக 7466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

கோவையில் 2650 பேரும் செங்கல்பட்டில் 2419 பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் - 1204, மதுரை - 1024 , கிருஷ்ணகிரி - 478, திருச்சி - 879 ,  திருநெல்வேலி - 768, தஞ்சாவூர் - 452,  தூத்துக்குடி - 628 ,ஈரோடு - 925, திருப்பூர் - 584 மற்றும் காஞ்சிபுரத்தில்  664 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.மாநிலம் முழுவதும்  1,62,181  பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments