அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கூடாது... கொரோனா பாதிப்பின் 3 கட்டங்கள்..!

0 87790
அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கூடாது... கொரோனா பாதிப்பின் 3 கட்டங்கள்..!

கொரோனா வைரஸ் பாதிப்பின் மூன்று கட்டங்கள், அறிகுறிகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஒருவர் தமக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதை, தொண்டை கரகரப்பு, எரிச்சல், தொண்டை உலர்ந்துபோதல், வறட்டு இருமல், அதிக உடல்வெப்ப நிலை, மூச்சுவிடுவதில் சிரமம், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகிய அறிகுறிகள் மூலம் அறியலாம்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 3ஆவது நாளில் இருந்து அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன.

இந்த முதல் கட்டத்தில் உடல் வலி, கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சலாக உணர்தல், தொண்டைப் புண் ஆகியவை ஏற்படும்.

எத்தனை நாட்கள் அறிகுறிகள் உள்ளன என்பதை குறித்துவைத்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும் காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் உள்ளிட்ட திரவங்களை அதிக அளவு அருந்த வேண்டும்.

அதிக அளவு நீர் அருந்துவது தொண்டை உலராமல் பாதுகாப்பதோடு, நுரையீரலையும் சுத்த செய்ய உதவும்.

நான்காவது நாள் முதல் 8ஆவது நாள் வரையிலான இரண்டாவது கட்டத்தில், நோயாளிகள் பாதிப்புகளை உணரத் தொடங்குவார்கள். சுவை இழப்பு, வாசனை இழப்பு அல்லது சுவை-வாசனை இரண்டுமே தெரியாமல் போதல், லேசான செயல்களை செய்தாலே சோர்வு ஏற்படுதல், நெஞ்சகப் பகுதியில் வலி, நெஞ்சை அழுத்துவது போல உணருதல், சிறுநீரகம் அமைந்துள்ள பகுதியில் வலி ஏற்படும்.

ஆக்சிஜன் விநியோகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ரத்தத்தின் தரம் பாதிக்கப்படும்.

9ஆவது நாள் முதல், கொரோனா பாதிப்பின் மூன்றாவது கட்டம் தொடங்குகிறது. குணமடையத் தொடங்கும் இந்த கட்டம் 14ஆவது நாள் வரை நீடிக்கிறது.

எனவே எவ்வளவு விரைவாக சிகிச்சையை தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவாக நலம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருத்தல், 7 முதல் 8 மணி நேரம் வரை ஓய்வெடுத்தல், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் அருந்துதல், சூடாக உணவை அருந்துதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ், 5.5 முதல் 8.5 வரை பிஎச் வேல்யு எனப்படும் அமில-காரத்தன்மை கொண்டது. எனவே, இதைவிட அதிக பிஎச் மதிப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, வாழை, மஞ்சள் எலுமிச்சை, அவக்கேடோ, பூண்டு, மா, மாண்டரின் ஆரஞ்சு, அன்னாசி, ஆரஞ்சு ஆகியவை அதிக பிஎச் மதிப்பு கொண்டவை.

வெந்நீர் அருந்துவது தொண்டைக்கு நல்லது என்றாலும், மூக்குப் பகுதிகளில் கொரோனா வைரஸ் மறைந்திருந்து நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.

மூச்சுவிடுவதில் சிரமங்கள் உருவாகும். எனவே, மூக்கு, வாய் வழியாக ஆவி பிடிப்பது இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையக்கூடும். 50 டிகிரி சி வெப்பநிலையில் வைரஸ் நிலைகுலைந்து போகும், 60 டிகிரி சி வெப்பநிலையில் பலவீனமடையும், 70 டிகிரி சி வெப்பநிலையில் முற்றாக அழிந்து போகும்.

எனவே ஆவி பிடிப்பது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நல்ல பலனைத் தரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments