வீடுகளுக்கே நேரில் சென்று, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பணியை, இலவசமாக செய்ய தயார் - ஓலா நிறுவனம்

0 2646
வீடுகளுக்கே நேரில் சென்று, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பணியை, இலவசமாக செய்ய தயார் - ஓலா நிறுவனம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பணியை, இலவசமாக செய்ய தயார் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இந்த திட்டம் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் பெங்களூருவில் இந்த வாரம் துவக்கப்பட்டு அதன்பின்னர் இதர நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

GiveIndia நன்கொடை நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுதும் 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஓலா செயலியில் இதற்காக விண்ணப்பித்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் வீடுகளுக்கே ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்டு வந்து, பயன்பாட்டுக்குப் பிறகு திருப்பி எடுத்துச் செல்லப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments