வரும் 14ந்தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்... சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் வருகிற 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். வருகிற 14-ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments