மதுரை அருகே மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை - கணவன், மனைவி தற்கொலை

0 48483
மதுரை அருகே மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை - கணவன், மனைவி தற்கொலை

துரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொல செய்து கொண்டனர்.

உசிலம்பட்டி ஆர்கே தெருவில் வசித்து வந்த சரவணன் தனது நகைப்பட்டறையை விரிவு படுத்துவதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப வழங்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தனது மூன்று குழந்தைகளுக்கும் நகைக்கு பாலிஷ் போடும் கெமிக்கலை கொடுத்து கொன்றுவிட்டு, மனைவியுடன் சேர்ந்து அதனை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தான் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் நிலையில் தனது தந்தையின் கடையில் நகை காணாமல் போனதை தான் தான் திருடியதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments