இந்தியன் 2 பட தாமதத்துக்கு லைகா நிறுவனமே காரணம் - இயக்குனர் சங்கர் குற்றச்சாட்டு

0 5496
இந்தியன் 2 பட தாமதத்துக்கு லைகா நிறுவனமே காரணம் - இயக்குனர் சங்கர் குற்றச்சாட்டு

இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமே காரணம் என உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியன்-2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கிற்கு இயக்குனர் சங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் படத்தின் பட்ஜெட்டை ரூ.250 கோடியாக குறைத்த லைகா நிறுவனம், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாக சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு, நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பில் கிரேன் விபத்து ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் தெரிவித்துள்ள இயக்குநர் சங்கர்,லைக்கா மனுவை தள்ளுபடி செய்ய கோரினார்.

விசாரணை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments