தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு போட்டியின்றி தேர்வு
16ஆவது சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை நடத்தப்பட இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு இணங்க, ராதாபுரம் எம்எல்ஏ மு.அப்பாவு, பேரவைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
பேரவை துணைத்தலைவர் பதவிக்கு கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால், பேரவைத் தலைவராக அப்பாவு, பேரவை துணைத்தலைவராக பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். சபாநாயகர் பதவியேற்பு நிகழ்வு நாளை நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பேரவை தலைவரை இருக்கையில் அமர வைப்பார்கள்.
Comments