ரெம்டெசிவிருக்காக இறந்தவர் பெயரில் போலியாக மருத்துவ சான்று தயாரித்து மோசடி - 3 பேர் கைது

0 2242
ரெம்டெசிவிருக்காக இறந்தவர் பெயரில் போலியாக மருத்துவ சான்று தயாரித்து மோசடி - 3 பேர் கைது

றந்தவர் பெயரில் போலியாக மருத்துவ பரிந்துரை கடிதம் தயாரித்து ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்ற சென்னையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை நேரடியாக வாங்க, மருத்துவரின் பரிந்துரை கடிதம், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்று, சி.டி.ஸ்கேன் சான்று, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம்.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் மருந்து வாங்க வந்த 3 பேரும் ஒரே மாதிரியாக தஞ்சாவூரிலுள்ள நேத்ரா சைல்டு கேர் (Child care) என்ற மருத்துவமனை சார்பில் செல்வம் என்ற நபருக்கு prescription எழுதி கொடுத்தது போன்று கடிதம் வைத்திருந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போது, பரிந்துரையில் குறிப்பிட்டிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வம் என்ற நபர் 7-ம் தேதியே கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த சான்றுகளும் கலர் ஜெராக்ஸ் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மூவரையும் கைது செய்து, பரிந்துரை கடிதம் யாரிடம் இருந்து கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments