ஐவர்மெக்டின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஐவர்மெக்டின் (ivermectin) மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த மருந்தை உலகம் முழுதும் தொடர்ந்து பயன்படுத்தினால், கொரோனாவை அழித்து விடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியானது.
பாராசைட்டிக் தொற்று சிகிச்சை மருந்தான ஐவர்மெக்டினால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என உறுதியான முடிவுகள் கிடைக்காத நிலையில் அதன் பாதுகாப்பு மற்றும் திறன் உறுதி செய்யப்படவில்லை.
எனவே அதை கிளினிகல் சோதனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதே எச்சரிக்கையை பிரபல ஜெர்மன் மருந்து நிறுவனமான மெர்க்கும் வெளியிட்டுள்ளது.
Comments