கங்கையில் மிதந்த கொரோனா சடலங்கள் ?

0 3683

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பல உடல்கள் பீகார் கங்கை நதியில் மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிழக்கு உத்தரபிரதேச எல்லையில் உள்ள பீகாரின் பக்சர் மாவட்டத்தில் இருக்கும் சவுசா (Chausa) கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டியபடி பல்வேறு உடல்கள் மிதந்து வந்தன.

சுமார் 30 முதல் 40 உடல்கள் மிதந்து வந்ததை பார்த்தாக சமூக ஆர்வலர் அஸ்வினி வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த உள்ளூர் அதிகாரிகள், உடல்கள் மிதந்து வந்ததை உறுதிப்படுத்தினர்.

அத்துடன் அந்த உடல்கள் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் அருகாமையில் உள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து இந்த உடல்கள் மிதந்து வந்தள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கங்கையில் மிதந்து வந்த உடலக்ள் சுமார் 5 முதல் 7 நாட்கள் வரை நீரில் இருந்திருக்கலாம் என்றும் வாரணாசி அல்லது அலகாபாத்தில் இருந்து உடல்களை கங்கையில் வீசியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே கங்கையில் மிதந்து வரும் உடல்களை நாய்கள் சுற்றி சுற்றி வருவதை காண முடிகிறது. அவற்றை நாய்கள் உணவாக கருதி சாப்பிட்டுவிட்டால் அவை மூலம் தங்கள் பகுதியில் கொரோனா பரவும் என்று சவுசா கிராம மக்கள் அச்சம தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்ய சுமார் 40ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாக கூறுகிறார்கள்.

இதற்கு வழியில்லாமல் ஏழை எளிய மக்கள் உடல்களை கங்கை நதியில் வீசிவிடுவதாக சொல்லப்படுகிறது. எனவே இறுதிச்சடங்கிற்கான விறகுகளின் விலையை குறைத்தால் இந்த நிலையை தடுக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.

அதே சமயம் இடுகாடுகளில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தினால் சடலங்களை கங்கையில் வீசுவதை தடுக்க முடியும் என்றும் சவுசா கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments