மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்வாகி உள்ள பாஜகவின் 77 எம்எல்ஏக்களுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு

0 4656
மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்வாகி உள்ள பாஜகவின் 77 எம்எல்ஏக்களுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்வாகி உள்ள பாஜகவின் 77 எம்எல்ஏக்களின் உயிருக்கும் தீவிர அச்சுறுத்தல் உள்ளதால், அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு CISF மற்றும் CRPF-ன் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜவினருக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைகள் குறித்து ஆராய உள்துறை அமைச்சக உயர்மட்ட அதிகாரிகள் குழு சென்றது.

அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பாஜ எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 61 பேருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பும், எஞ்சியவர்களில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தவிர மற்றவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சுவேந்து அதிகாரி ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments