கங்கை நதியில் மிதந்து வந்த 45 சடலங்கள் மீட்பு : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என அதிர்ச்சித் தகவல்

0 2638
கங்கை நதியில் மிதந்து வந்த 45 சடலங்கள் மீட்பு : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என அதிர்ச்சித் தகவல்

பீகாரில் உத்தரப்பிரதேச எல்லை அருகே உள்ள பக்சர் மாவட்டத்தில் கங்கை நதியில் இருந்து உடல் அழுகிய நிலையில் 45 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவை கொரோனா நோயாளிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் இதனை மறுத்துள்ள மாவட்ட நிர்வாகம், இதுவரை 15 உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை உள்ளூர் மக்களின் உடல்கள் அல்ல என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மீட்கப்பட்டவை கொரோனா நோயாளிகளின் உடல்களா என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments