நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர நினைப்பது மக்களை ஏமாற்றும் செயல் -எல்.முருகன்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டுவர நினைப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற நான்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் வெற்றிக்கு வேல் யாத்திரை தான் காரணம் என்றார்.
மேலும், 4 எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற வைத்த அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு கட்சி சார்பில் இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments