தெலுங்கானாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா? இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

0 1666
தெலுங்கானாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா? இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தெலங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

இதுபற்றி அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது முடக்கத்தின் சாதக, பாதகங்கள் குறித்தும், அதன் தாக்கங்கள் குறித்தும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments