நேபாள நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சர்மா ஒலி அரசு கவிழ்ந்தது..! புதிய பிரதமரைத் தேர்வுசெய்யுமாறு கட்சிகளுக்கு அதிபர் அழைப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் மூலம் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளியின் ஆட்சி கவிழ்ந்தது.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தமாலின் கட்சி வாபஸ் பெற்றதை அடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தமுள்ள 275 எம்.பி.க்களில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் கே.பி.ஷர்மாவுக்கு 136 வாக்குகள் தேவைப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு 93 ஆதரவு ஓட்டுகள் கிடைத்த நிலையில் 124 எதிர் வாக்குகள் பதிவானது.
இதையடுத்து சர்மா ஒலியின் கவிழ்ந்த நிலையில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யுமாறு கட்சிகளுக்கு அதிபர் அழைப்பு விடுத்து உள்ளார்.
Comments