ஒடிசாவில் ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் நாய், மாடுகளுக்கு உணவளிக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு..!
ஒடிசாவில் ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் நாய்கள் மற்றும் மாடுகளுக்கு உணவளிக்க 60 லட்சம் ரூபாயை ஒதுக்கி முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரேனா தொற்றைக் கட்டுப்படுத்த நேற்று முதல் 14 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஆதரவின்றி வாழும் நாய்கள் மற்றும் மாடுகளுக்கு 60 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கி முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணத்தின் மூலம் 5 மாநகராட்சிகள், 48 நகராட்சிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நாய்கள் மற்றும் மாடுகளுக்கு உணவளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Comments