2027 ஆம் ஆண்டுக்குள் எரிபொருள்களால் இயங்கும் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள் விலை சரியும் - ப்ளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்
2027 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் போன்ற எரிபொருள்களால் இயங்கும் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் விலை மிகவும் மலிவாக இருக்கும் என ப்ளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பேட்டரி கார்கள் வாங்க நினைப்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது அதன் விலைதான்.
ஆனால் இனிவரும் காலங்களில் பேட்டரி தயாரிப்பதற்கு ஆகும் செலவுகள் மற்றும் உற்பத்தி வரி ஆகியவை வீழ்ச்சியடையும் என்பதால் எலெக்ட்ரிக் கார்களின் விலை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுவரும் 1 கோடியே 10 லட்சம் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 14 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Comments