தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமல்

0 2069
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமல்

மிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட 14 நாள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.

மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. பேருந்துகள் ஓடாததால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆட்டோக்கள், டாக்ஸி வாகனங்கள் ஓடவும் அனுமதியில்லை. பெட்ரோல் பங்குகள், பாலகங்கள், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்கவில்லை. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, முக்கிய கடைவீதிகளான அண்ணா சாலை, நேரு சாலை, கடற்கரை சாலைகள் வெறிசோடி காணப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments