தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பொறுப்பேற்பு

0 2384
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பொறுப்பேற்பு

மிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால், அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயண் பதவி விலகினார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசு தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். தலைமை வழக்கறிஞர் நியமனத்துக்குச் சனியன்று ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையில் அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments