கொரோனாவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று வர்ணித்த நடிகை கங்கனா ரணாவத்தின் பதிவுவை நீக்கியது இன்ஸ்டாகிராம்
கொரோனாவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று வர்ணித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கி உள்ளது.
தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாவும், சாதாரண காய்ச்சலான அதற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கங்கனா ரணாவத் பதிவிட்டிருந்தார்.
கொரோனாவை தான் ஒழித்துவிடுவேன் என்றும் அவர் பதிவிட்டார். இது தவறான தகவலை பரப்பும் செயல் என்பதால் அவரது இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கு வங்க தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டது. அவரது ஃபேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் எப்போது வேண்டுமானலும் முடக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
Comments