நீண்ட உபாதைகள் இருப்பவர்களுக்கு புதிய பூஞ்சைத் தொற்று உருவாகிறது :ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
நீண்ட கால நீரிழிவு நோய் கொண்டவர்கள் மற்றும் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்றின் போது ஆபத்தான பூஞ்சை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், நீண்டகாலமாக உடல் பாதிப்பு இருப்பவர்களின் உடலில் மியூகோமிகோஸிஸ் என்ற பூஞ்சை உருவாவதாக தெரிவித்துள்ளது. ஆபத்தான வகையைச் சேர்ந்த இந்தப் பூஞ்சை, மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனைக் குறைத்து விடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த வகைப் பூஞ்சைகள் காற்றில் பறந்து உடல் நலம் பாதித்தவர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றி சிவந்த நிறத்தில் வலி, தலைவலி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் ரத்த வாந்தி ஏற்படும் என்றும் ஐசிஎம்ஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments