"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மும்பை, ஐதராபாத்தில் இருந்து 7,55,530 தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன..!
மும்பை, ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தன.
கொரோனா பரவலில் இருந்து தமிழக மக்களைக் காக்க கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து மும்பையில் இருந்து விமானம் மூலம் 5 லட்சத்து 89 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
அதேபோல் ஐதராபாத்தில் இருந்து மற்றொரு விமானம் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 530 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
அவற்றைப் பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறையினர் டி.எம்.எஸ். மருத்துவ கிடங்கிற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
Comments