"கொரோனா சிகிச்சை அளிக்க எனது கல்லூரியை பயன்படுத்திக்கொள்ளலாம்" -விஜயகாந்த்

0 17173
"கொரோனா சிகிச்சை அளிக்க எனது கல்லூரியை பயன்படுத்திக்கொள்ளலாம்" -விஜயகாந்த்

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments