கொரோனா தொற்றுள்ளோரிடம் இருந்து 6 அடி தள்ளி இருந்தாலும் பரவ வாய்ப்பு - அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தகவல்
கொரோனா தொற்றுள்ளோர் ஆறடிக்கு அப்பால் இருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் காற்றில் கலந்த வைரஸ் தொற்று மூச்சுக்காற்றில் உட்புக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கொரோனா தொற்றுள்ளோரிடம் இருந்து வெளிப்படும் வைரஸ் காற்றில் கலந்து ஆறடிக்கு அப்பால் உள்ள ஒருவருக்கும் தொற்ற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
காற்றோட்டம் குறைந்த, கூட்டம் அதிகமுள்ள உள்ளரங்கத்தில் தொற்றுள்ளோரின் சளியில் இருந்து வெளிப்படும் வைரஸ் அங்குள்ள பிறருக்குத் தொற்றும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Comments