தமிழக முன்னாள் தலைமைச் செயலர் சம்பந்தி வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது

0 2351
தமிழக முன்னாள் தலைமைச் செயலர் சம்பந்தி வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது

ந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சம்பந்தி வீட்டில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ராம்மோகன் ராவின் சம்மந்தி பத்ரி நாராயணா வீட்டில் கடந்த மாதம் 28ஆம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் 3 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகள் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.

நேற்று முன்தினம் வேலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் சிக்கிய தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சக்தி பாபு மற்றும் நாகேந்திரா இருவரும் பத்ரி நாராயணா வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

திருட்டு நகைகளை வாங்கிய நபரையும் கைது செய்த போலீசார் நகைகளை கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments