அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்வு

0 3703
அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்வு

சாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ஹிமந்த பிஸ்வ சர்மா பொறுப்பேற்க உள்ளார். 126 உறுப்பினர் கொண்ட அசாம் சட்டமன்றத்தில் பாஜக 60 தொகுதிகளையும், கூட்டணிக் கட்சிகள் 15 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

முந்தைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஹிமந்த பிஸ்வ சர்மா முதலமைச்சராக விரும்பியதால் போட்டி நிலவியது.

டெல்லியிலும் குவகாத்தியிலும் கட்சித் தலைமை முன்னிலையில் நடந்த பேச்சில் ஹிமந்த பிஸ்வ சர்மாவை முதலமைச்சராகத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சர்வானந்த சோனோவால் ஆளுநரிடம் அளித்தார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments