வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 2244
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், 10-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் காரணமாக இயல்பு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments