பீதியை ஏற்படுத்திய சீனாவின் ராக்கெட் இந்திய பெருங்கடல் பகுதிக்கு மேல் வானில் எரிந்து சாம்பல்
பூமியில் மக்கள் வசிக்கும் இடத்தில் விழுந்து விடுமோ என்ற பீதியை ஏற்படுத்திய சீனாவின் ராக்கெட் பாகங்கள், இந்திய பெருங்கடல் பகுதிக்கு மேல் வானில் எரிந்து சாம்பலாகி விட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் விண்வெளி பொறியியல் திட்ட அலுவலகத்தை மேற்கோள் காட்டி சீனாவின் அரசு தொலைக்காட்சி இன்று காலை இந்த தகவலை வெளியிட்டது.
அமெரிக்க ராணுவ தரவுகளின் அடிப்படையில் விண்வெளி நிகழ்வுகளை கண்காணிக்கும் Space-Track அமைப்பும் இதை டுவிட்டரில் உறுதி செய்துள்ளது.
சீன விண்வெளி நிலையத்தின் கட்டுமான கலத்தை விண்ணில் நிறுத்தி விட்டு பூமிக்கு திரும்பிய சீனாவின் லாங் மார்ச் என்ற இந்த ராக்கெட், திடீரென விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது.
18டன் எடையுள்ள ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் மக்கள் வசிக்கும் இடத்தில் விழக்கூடும் என நிலவிய அச்சம் இப்போது அகன்றுள்ளது.
Comments