அஸ்ஸாம் - புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

0 1347
அஸ்ஸாம் -புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

ஸ்ஸாம் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.

புதிய முதலமைச்சர் யார் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் பதவிக்கு பழங்குடி இனத்தவரின் ஆதரவு பெற்ற ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் பெயரும் அடிபடுவதால் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, அஸ்ஸாமில் புதிய அரசு அமைப்பது குறித்து பாஜக தலைவர் நட்டாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு ஆலோசனை நடத்தினார்.

அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினர். சட்டமன்றத் தேர்தலில் அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 126 இடங்களில் 75 இடங்களைக் கைப்பற்றியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments