மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் துள்ளி விளையாடும் எலிகள்..! தடுக்க இயலாமல் தவிப்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பெண்களுக்காண பொது வார்டில் எலிகள் துள்ளி விளையாடுவதால் நோயாளிகளும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு கொரோனா நோயாளிகளுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள பெண்களுக்கான பொது வார்டில்
கொரோனா நோய் தவிர்த்து மற்ற வியாதிகளுக்காக ஏராளமான பெண் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் உணவு பொருட்கள் திண்பண்டங்கள் போன்றவற்றை கொண்டு வருவது வழக்கம் அவர்கள் சாப்பிட்டு விட்டு போடும் மிச்சம் மீதியை உண்பதற்காக எலிகள் வார்டுக்குள் வலையவருகின்றன.
அரசு மருத்துவமனை நமக்கானது என்பதை மறந்து உணவு பொருட்களை வீசி நோயாளிகள் உறவினர்கள் ஒருபக்கம் மெத்தனமக நடந்து கொள்ளும் நிலையில் வார்டை சுத்தப்படுத்தி கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கூட நோயாளிகளை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மருத்துவமனை ஊழியர்களும் கவனக்குறைவாக நடந்து கொள்வதால் கண்ணுக்கு தெரிய எலிகள் பல நோயாளிகளுடன் துள்ளி விளையடி வருகின்றன
தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பிரட், பழங்கள் போன்றவற்றையும் இந்த எலிகள் வேட்டையாடிவிடுவதாக வேதனை தெரிவித்த நோயாளியின் உறவினர் ஒருவர் இந்த வீடியோக்களை எடுத்து ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்த கொரோனா காலத்திலும் இட நெருக்கடியுடன் காணப்படும் இந்த வார்டில் , நோயாளி ஒருவருக்கு கொரொனா தோற்று உறுதியான நிலையில் அவரை தனிமைபடுத்த உடனடி நடவடிக்கை ஏதும் எதுக்கபடாததால் மற்ற நோயாளிகள் அச்சம் அடைந்தனர்.
சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு சமந்தபட்ட கொரொனா நோயாளி தனிவர்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
நெருக்கடியான காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக உள்ள மருத்துவமனை ஊழியர்களின் அர்ப்பணிப்பு அளவிட முடியதது. அதே நேரத்தில் இதே போன்ற ஒரு சில கவனக்குறைவான நிகழ்வுகளை திருத்திக் கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments