180 மாவட்டங்களில் 7 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வரதன் தகவல்

0 3458
180 மாவட்டங்களில் 7 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வரதன் தகவல்

ந்தியாவில் உள்ள 180 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார்.

54 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3 கோடியே 18 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 16கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்ப்டடிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments