இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபரில் தாக்குவதற்கு வாய்ப்பு-ஆய்வில் கண்டுபிடிப்பு
இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை அக்டோபர் மாதம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் பெருந்தொற்றின் 2வது அலை வரும் ஜூலை மாதம் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளனர். தற்போது அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் விரைவில் சரிவைச் சந்திக்கும் என அவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அக்டோபரில் 3 வது அலை வந்தாலும் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது என்றும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
Comments