பூமியை நோக்கி வேகமாக வரும் சீன ராக்கெட் எங்கு விழும்? அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை
எந்த கட்டுப்பாடும் இன்றி பூமியை நோக்கி வேகமாக வரும் சீன ராக்கெட்டின் பெரிய பாகங்கள் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் விழக்கூடும் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தனது புதிய விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை கடந்த 29 ஆம் தேதி Long March-5B ராக்கெட் மூலம் சீனா அனுப்பியது. கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தி விட்டு, மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான வேலைகளில், லாங் மார்ச் 5பி ராக்கெட் ஈடுபட்டது.
அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எனவே எந்த நேரமும் அந்த ராக்கெட், பூமியில் விழும் சூழல் ஏற்பட்டு உலகம் முழுதும் ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது.
ஆனால் 18 டன் எடையுள்ள ராக்கெட்டின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகி விடும் என சீனா தெரிவித்துள்ளது. எஞ்சிய பாகங்கள் கடலில் விழும் என சீனா கூறினாலும் உலக நாடுகள் அதை நம்ப தயாரில்லை.
Comments