சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக நலவாழ்வு நிறுவன ஒப்புதல் கிடைத்தது ஒரு மைல்கல் :சீனப் பிரதிநிதி பெருமிதம்
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது ஒரு மைல்கல்லாகும் எனச் சீனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சைனோபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த உலக நலவாழ்வு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் சீனப் பிரதிநிதி கவுடன் காலியா விடுத்துள்ள அறிக்கையில், மேலும் 15 கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணிகள் முன்னேற்றம் பெற்றுள்ளதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் பெற இது தூண்டுதலாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல பத்தாண்டுக்கால முதலீடு, சீன அறிவியலாளர்களின் பல்லாண்டுக் காலப் பயிற்சி, ஆராய்ச்சி, ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவற்றால் கிடைத்த வெற்றி இது என அவர் தெரிவித்துள்ளார்.
Comments