கொரோனா பாசிட்டிவானதாக கூறி திருமணத்தை நிறுத்திய இளம்பெண்..! விருப்பமில்லாத திருமணத்தை செய்துவைப்பதாக புகார்

0 5464
கொரோனா பாசிட்டிவானதாக கூறி திருமணத்தை நிறுத்திய இளம்பெண்..! விருப்பமில்லாத திருமணத்தை செய்துவைப்பதாக புகார்

ந்திராவில் திருமணத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன் தனக்கு கொரோனா பாசிடிவ் ஆனதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.

தர்மவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும் முதுகுப்பாவை சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்களால் நிச்சயித்தபடி, கதிரியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெறவிருந்தது.

திருமணத்திற்காக ஹரிபிரசாத் குடும்பத்தினர் குஷ்மாவின் தாயாருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மற்றும் 13 சவரன் நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தபோது குஷ்மா, தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதாகவும், தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்துவைப்பதாகவும் கூறி கதிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை கேட்ட போலீசார், கொரோனா பாசிடிவான பெண் காவல் நிலையத்தில் இருக்கக்கூடாது எனக்கூறி விரட்டி அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments