கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை ரூ. 2 இலட்சத்துக்கு மேலும் பணமாகப் பெறலாம்.. வருமான வரிச் சட்ட விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு
கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலும் பணமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் வருமான வரிச் சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஒருவரிடமிருந்து 2 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைப் பணமாகப் பெறக் கூடாது, காசோலையாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என வருமான வரிச்சட்டத்தில் விதி உள்ளது.
2 லட்ச ரூபாய்க்கு மேல் பணமாகப் பெற்றால் அது குறித்து வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் கொரோனா சூழலில் நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனைகள் 2 லட்ச ரூபாய்க்கு மேலான தொகையையும் பணமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் வருமான வரிச் சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 முதல் மே 31 வரையான காலத்துக்கு இந்தத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நோயாளி மற்றும் பணம் செலுத்துபவரின் பான் கார்டு எண், ஆதார் எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
Comments