வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி, குமரி மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தரைக்காற்று மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளதால், கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் 11-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
Comments