பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு கொரோனா தொற்று
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தாம் தளர்வாகவும், பலவீனமாகவும் உணர்ந்த தாகவும், கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சோதனை செய்து கொண்டதில் கொரோனா உறுதியானதாகவும் இன்ஸ்டாகிராமில் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதியானதால் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், கொரோனா குறித்த அச்சம் மக்களுக்கு தேவையில்லை, அதை எல்லோரும் சேர்ந்து ஒழித்து கட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments