மும்பையில் அரியவகை மரபணு நோயால் அவதிப்பட்ட 5 மாத குழந்தை; ரூ.16 கோடி நன்கொடை வாரி வழங்கிய நல் உள்ளங்கள்..!

0 2247
மும்பையில் அரியவகை மரபணு நோயால் அவதிப்பட்ட 5 மாத குழந்தை; ரூ.16 கோடி நன்கொடை வாரி வழங்கிய நல் உள்ளங்கள்..!

மும்பையில் மரபணு நோயால் அவதிப்பட்ட ஐந்து மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் நன்கொடையை நல் உள்ளம் கொண்டவர்கள் வாரி வழங்கியுள்ளனர்.

அஹமதாபாத்தைச் சேர்ந்த Rajdipsinh Rathod என்பவரின் 5 மாத குழந்தைக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (spinal muscular atrophy) என மரபணு நோய் இருந்தது.

இந்த நோய் நரம்பு மண்டலத்தை முற்றிலும் தாக்கும் என்ற மருத்துவர்கள், குழந்தை 2 வயதிற்கு மேல் உயிர்வாழ்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் 'ஜோல்ஜென்ஸ்மா' (Zolgensma) என்ற மருந்தை செலுத்தினால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

உலகிலேயே மிகவும் விலை மதிப்புள்ளதாக அறியப்படும் அந்த மருந்தின் ஒரு டோஸ் விலை 16கோடி ரூபாய் ஆகும்.

சுமார் 2 லட்சம் பேர் குழந்தையின் சிகிச்சைக்காக நிதியுதவி அளித்த நிலையில் மருந்து செலுத்தப்பட்டு, குழந்தை உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments