இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வொர்க் பர்மிட் இருந்தாலும் சிங்கப்பூர் வர தடை

0 3826
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வொர்க் பர்மிட் இருந்தாலும் சிங்கப்பூர் வர தடை

ந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அந்த நாடுகளை சேரந்தவர்கள் வேலைக்கான அனுமதி சீட்டு வைத்திருந்தாலும் சிங்கப்பூருக்கு வர அனுமதி இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

அதே நேரம் கட்டுமானம், கப்பல்தளபணி மற்றும் பதப்படுத்துதல் பணி தொடர்பான வேலை பெர்மிட் வைத்திருப்பவர்கள் வரலாம்.

கொரோனா தொற்று குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வரும் பணியாளர்களுக்கு இந்த தடை பொருந்தாது. கடந்த 14 நாட்களில் இந்தியாவுக்கு சென்ற வெளிநாட்டு பயணிகள் சிங்கப்பூர் வரவும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments