கொரோனாவால் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வயதான தம்பதி தூக்குப் போட்டு தற்கொலை

0 7435
கொரோனாவால் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வயதான தம்பதி தூக்குப் போட்டு தற்கொலை

சென்னை மதுரவாயலில் கொரோனாவால் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வயதான தம்பதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேல் நகரை சேர்ந்த அர்ஜூனன் என்பவரின் மனைவி அஞ்சலைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. .

மருத்துவரை அணுகிய நிலையில் அஞ்சலைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் பாசிடிவ் வந்து இருவரும் பிரியும் சூழல் ஏற்படுமோ என்ற அஞ்சிய தம்பதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கு வேறேதும் காரணங்கள் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments