மும்பையில் நடைபெற்ற விநோத திருமணம் : தாலியை மாறி மாறி கட்டிக் கொண்ட காதல் ஜோடி

0 3062
மும்பையில் நடைபெற்ற விநோத திருமணம் : தாலியை மாறி மாறி கட்டிக் கொண்ட காதல் ஜோடி

மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருவர் மாறி மாறி தாலிக் கட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டீல், ஷார்துல் கதம் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட போது ஷார்துல் கதம் தனது காதலியிடம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை குறிக்கும் வகையில் திருமணத்தின் போது மாறி மாறி தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி தங்களது முடிவில் உறுதியாக இருந்து திருமணத்தின் போது மாறி மாறி தாலி கட்டிக் கொண்டனர். அவர்களின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments