இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு

0 2775
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு

கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தை கடந்து நீடிக்கிறது.

24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 78 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

3 லட்சத்து 18 ஆயிரத்திற்கு அதிகமானோர் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் மற்றும் வீடுகளில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 446 ஆக உள்ளது.

மொத்த இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16கோடியே 73லட்சத்து 46ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments