திருமணத்தை மறைத்து இளைஞரை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த இளம்பெண்...

0 37886
திருமணத்தை மறைத்து இளைஞரை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த இளம்பெண்...

ள்ளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளின் தாய் தனது முதல் திருமணத்தை மறைத்து வேறு ஒரு இளைஞனை திருமணம் செய்துகொள்ள முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த தம்பதியர்கள் அனிதாதேவி- முனியப்பிள்ளை. இவர்களுக்கு தற்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அனிதாதேவி சிறுவல் என்ற ஊரைச் சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை காதல் வலையில் சிக்க வைத்து, பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சுபாஷ் சந்திரபோஸ் அதற்கு மறுத்ததால் அவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அனிதா தேவி புகார் அளித்தார்.

போலீசார் விசாரணைக்கு பிறகு சுபாஷ் சந்திரபோஸ் அனிதாதேவியை திருமணம் செய்து கொள்வதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அனிதாதேவியின் வீட்டிற்கு சென்று விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும், கணவரும் இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்போது அங்கு வந்த அனிதா தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் பெற்றோரிடம் தகராறு செய்தது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அனிதாதேவி மீது புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனிதா தேவியை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments