சென்னை காவல் ஆணையர் உள்பட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

0 4258
சென்னை காவல் ஆணையர் உள்பட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை காவல் ஆணையர் உள்பட மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், அவருக்கு பதிலாக புதிய காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்படுவதாகவும் உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments