பசுமை இல்ல வாயுக்களை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம்..!
சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பசுமை இல்ல வாயுக்களை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
உலக நாடுகள் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை அதிகளவு வெளியேற்றுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து பருவநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கிறது.
உலகிலேயே அதிக அளவில் கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளாக அமெரிக்காவும், சீனாவும் உள்ளன. சீனா 27 சதவீதமும், அமெரிக்கா 11 சதவீதமும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதாக ரோடியம் (Rhodium)குழுமத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Comments