சென்னை நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

0 2474
சென்னை நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவமனைகளிலும் குறைவான எண்ணிக்கையிலேயே படுக்கைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் மொத்தமாக 850 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், 364 படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட படுக்கைகள் ஆகும். மேலும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி கிடைக்க, 11ஆயிரம் கிலோ லிட்டர் கொண்ட சேமிப்பு கிடங்கு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments